என்று நாம் சொல்லும் போழுது, உண்மையில் நாம் சொல்வது
ஒரு "மனகாட்சி" பற்றியே.
அந்த காட்சி…
இன்னும் வராத எதிர்காலத்தின் உள்ளுணர்வு.
இருள் நிறைந்த தருணங்களிலும் வண்ணங்களும் உணர்வுகளும் கொண்டு உயிருடன் தோன்றும் ஒரு எதிர்காலக் காட்சி.
இசையில்லாமல் கூட
இதயம் ஓசைகளை கேட்கும் அளவிற்கு
உண்மையும் உயிர்ப்பும் கொண்ட ஒரு இனிய காட்சி.
அருகில் இருப்பவர்களைப் போல உணர்த்தும் மனிதர்கள்...
ஆனால் இன்னும் வாழ்க்கையில் சந்திக்காத முகங்கள்.
தொட்டுப் பார்க்க முடியாத காட்சி,
ஆனால் மனசாட்சியை தொட்டுவிடும் உணர்வுகள்.
பரிமாறப்பட்டிருக்கும் பண்டங்களின் சுவை
நாக்கில் நீர் சுரக்கவைக்கும்
ஒரு சுவையான காட்சி.
மணமில்லாத காற்றிலும் கூட மனது வாசனையை உணரும்
ஒரு எதிர்கால உண்மை.
அதனால் தான்…
“நான் ஒரு கனா கண்டேன்”
என்று நாம் சொல்லும் போழுது, உண்மையில் நாம் சொல்வது
— “என் வாழ்வின் ஒரு லட்சியத்தை கண்ணெதிரே கண்டேன். கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்”
— கீட்ஸ் பாலதாசன்
17th May 2026
7:47 am
பெருங்குடி, சென்னை.
No comments:
Post a Comment