Wednesday, April 2, 2025

நடைபாதை, நம் உரிமை

நடைபாதை கடை மேடை அல்ல
வணிகம் செய்து வரி வசூலிக்க 

அவை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதை 
மக்களின் வரிப்பணத்தால் கட்டிய பாதை 

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான அறிகுறி நடைபாதையின் அகலம்
முன்னேற்றத்தை நோக்கி செல்லும் பாரதத்திலோ  இவை ஒரு ஆடுகளம்

கறி காய், இளநீர், கையேந்தி பவன், இறைச்சிக்கடை ஒரு பக்கம் 
மின்சார வாரியம், தொலைபேசி, பிராட்பாண்ட் ஆக்கிரமைப்பு மறுபக்கம் 

மக்கள் எங்குதான் நடப்பார்கள்?  வாகனங்களுக்கு நடுவிலா? 

நடைபாதை நம் உரிமை.
நமது உரிமையை அறிவோம். 
நடைபாதை அமைக்க கோரிக்கை இடுவோம்.
நல்லதோர் நகரத்தை உண்டாக்குவோம்.

No comments:

Post a Comment

முகவரி

முகவரியின் முகம் அதன் முதல் வரி பலருக்கு அகமே  அவர்களது முகவரி சிலருக்கு முகமே  அவர்களது முகவரி வாழ்வின் வெற்றிக்கு  அதுவே அறிகுறி அகம், பொர...