Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Thursday, December 25, 2025

முகவரி

முகவரியின் முகம்
அதன் முதல் வரி
பலருக்கு அகமே 
அவர்களது முகவரி

சிலருக்கு முகமே 
அவர்களது முகவரி
வாழ்வின் வெற்றிக்கு 
அதுவே அறிகுறி

அகம், பொருள் இருந்தும்
எழும் கேள்விக்குறி
நிறைவில்லா வாழ்வின் 
மனக்குரலின் எதிரொலி

இன்பம் அருள் சொந்தம்
நட்பு மற்றும் நேர்வழி
வாழ்வில் பூர்த்தி அடைய
அகமில்லா முகவரி

© கிட்ஸ் பாலதாசன் 
(Balaji Palanidurai)
25th December 2025


Wednesday, January 6, 2021

நரையும் மனநிறைவும்


நேற்று, என் நரையை கண்டு 
மனம் வாடிய சொந்தங்களுக்காக இன்று கறை அடித்தேன். 

கறை களைகட்டியது, முகம் மலர்ந்தது. ஆனால் என் மாற்றத்தை கண்ணாடி கண்டுகொள்ளவில்லை, புகைப்படமும் பாராட்டவில்லை. 
மனமில்லா கருவிகள்.

கறை, நரையை மறைக்கலாம், நிஜத்தை மறைக்குமா?

நிஜத்தை தாங்கும் தன்நம்பிக்கை இருந்ததால், தலைநரையே மன நிறைவின் முண்ணுதிரி என்று ஏற்றுக்கொண்டேன். 

கண் மீண்டும் கண்ணாடியை கண்டது. அகத்தின் அழகு முகத்தில் பிரதிபலித்தது.
மனம் மலர்ந்தது.

நெகிழ்ந்தேன். மகிந்தேன். பகிர்ந்தேன்.

- கீட்ஸ் பாலதாசன்

Sunday, October 7, 2018

நினைத்தேன் நிறைந்தேன்



என் அத்தானுடன் வாழ்ந்த காலத்தை நினைத்தேன்
பல ஆயிரம் வண்ணக்கணவுகளுடன் மனம் நிறைந்தேன்

எட்டாறு ஆண்டுகளுக்கு முன்பு இல்லற வாழ்வின் தொடக்கத்தை நினைத்தேன்
எட்டாறு மாதங்கள் அவ்வாழ்வின் ஒவ்வொரு நொடியுடன் மனம் நிறைந்தேன்

கடந்த ஈராறு மாதங்களில் புது வாழ்வின் மாற்றங்களை நினைத்தேன்
நல்லதோர் குடும்பம் மற்றும் நோயற்ற வாழ்வில் மனம் நிறைந்தேன்

எழுபதிலும் வெற்றிநடைப் போடும் செட்டிநாடு ஆச்சீயை நினைத்தேன்
தானாக வந்த ஊக்கம் மற்றும் மனஉறுதியுடன் மனம் நிறைந்தேன்

வாழ்வில் நான் கடந்துவந்த பல வெற்றி- தோல்விகளை நினைத்தேன்
அவற்றை உணர்ந்து கற்று வாழும் பக்குவத்துடன் மனம் நிறைந்தேன்


----------
©Balaji Palanidurai
I wrote this poem on 6th Oct 2018 midnight by the bar and dinning area at Club Mahindra Puducherry (Pondicherry). 6th Oct happens to be my dad's remembrance day and usually we spend the day at home. There is a ritual that we do to help his soul rest in peace. I support this so my mom feels at ease. 

This year I wanted to do something different and booked a family holiday to celebrate his and our life. Pondicherry felt like a good idea as my father used to frequent and loved going there. 

Glad I did what I did. We had a wonderful time and I saw my mother rejuvenating at 70! This poem is my dedication to her and infact is actually her mind voice ...that i heard!

Saturday, July 28, 2018

கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்
இப்பிறப்பின் இலக்கை நான் கண்டுகொண்டேன்

பாரம்பரியத்தை நோக்கி "ஒற்றன் பாதை" 
என்ற விளம்பரம் ஒன்று கண்டேன்
அச்சுற்றுப்பயணத்தின் நடத்துனர் என் நண்பன் 
என்பதில் பெருமிதம் கொண்டேன்

தமிழ் பாரம்பரியத்துக்கு உரிய 
அழகையும் பெருமையையும் கண்டேன்
அதை பார்த்து, உணர்ந்து மகிழ 
புதியதோர் உற்சாகம் கொண்டேன்

உலகம் போற்றும் இலக்கியம் மற்றும்
 பேரரசர்களின் சிலைகள் கண்டேன்
அவற்றை அறிந்து, உணர்ந்து வாழ 
மனதிலோர் உறுதி கொண்டேன்

நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தை 
விவரிக்கும் கல்வெட்டுகள் பல கண்டேன்
இவை மரபுவழியில் தொலைைந்து விடுமோ என்ற அச்சம் கொண்டேன்

பயணத்தில் இரு சிட்டுகள் தம் தந்தையின் 
தோள்களில் உலா வருவதை கண்டேன்
இளைய தலைமுறை இனி தலைதூக்கி
திகழும் என நிம்மதி கொண்டேன்

பழமையின் புதுமையை அறிய உணர்த்தும்
கருவிகள் உபயோகத்தில் கண்டேன்
பழமையில் புதுமை காணும் தொழில்நுட்பத்தை 
ஊக்குவிக்க உறுதி கொண்டேன்

கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்
இப்பிறப்பின் இலக்கை நான் கண்டுகொண்டேன்


--------------------------------
©Balaji Palanidurai

This poem is inspired by the "Beauty of our heritage" poem I wrote. I received a lot of positive feedback and appreciation for the deep meaning in that. I also received few requests to write a similar one in Tamil and this is it. I wrote this in a few hours on the morning of 28th July when I stumbled upon a WhatsApp message from a friend that had links to an article about Tamil influence in Japan and Thailand.

So, I would like to dedicate this poem to my friends Clement Anand Rajaratnam (father of Ottran Padhai) and Sandhya Aravind (Founder of ChapterTwo Life coaching) whose WhatsApp message expedited this creation.

Saturday, October 14, 2017

இழப்பின் உள் குரல்

மாலை நேர மயக்கமா அல்லது
மனதில் தோன்றிய வருத்தமா?
தன் தந்தை இறுதி படுக்கையில்
மெலிந்து உறங்கும் தோற்றமா?
தன் நெஞ்சில் என்னை தூக்கி வளர்த்த அவரை
என் தோள்கள் சுமக்கும் காலம் தள்ளித்தான் போகுமா?
கூடியிருக்கும் சொந்தங்களுக்கு 
என் உள் குரல் தான் கேட்குமா?
கேட்டாலும், போகும் உயிரை 
அவர்களால் தடுக்க முடியுமா?
குடும்பத்தலைவன் பொறுப்பை ஏற்கும் 
தருணம் வந்துவிட்ட அச்சமா?
அப்பொறுப்பில் கால்பங்கு எனக்கு
மரபுவழி தான் வந்து சேருமா?
கொள்ளிவைத்த கைகளுக்கு கடைசி 
வரம் ஒன்று கிடைக்குமா?
என் தந்தை உறங்க இடம் ஒன்று 
சொர்க்கத்தில் கிடைக்குமா?

©Balaji Palanidurai

Friday, August 18, 2017

சித்தி, செழிக்கும் சக்தி

என் சித்தி LIC பாலிசி விற்று சாதனை புரிந்துள்ளார். அவருக்கு LIC சார்பாக Independence Day Medal வழங்க பட்டது.
அவரது திறமைக்காக சில வரிகள்....

எத்தனை பதக்கங்கள் இன்று, வாங்கினாய் தலை நிமிர்ந்து நின்று
அத்தனை காப்பீடுகள் அன்று, வாங்கினாய் கால்நோக ஓடோடி சென்று

ஆங்கிலதில் இயல்பாக பேச இயலவில்லை என்ற தயக்கம் ஒருபக்கம்
ஆண்கள் ஆதிக்கம் மற்றும் சர்க்கரை நோயின் மயக்கம் மறுபக்கம்

தன்னம்பிக்கை தலைதூக்கியது, உற்சாகம் ஊக்குவித்தது
குடும்பம் கைகொடுத்தது.
உபயோகித்தாய். சமூகத்தை சமாளித்தாய், வாடிக்கையாளரை வசப்படுத்தினாய், வணிகத்தை வென்றாய்

தன் வெற்றிக்கு காரணம் தெய்வபக்தியும் குருப்பெயர்ச்சியும் என சொல்வாய்
எனக்கு தெரிந்த காரணம் மனஉறுதியும் விடாமுயற்சியும்;
அதை நீயும் நன்கு அறிவாய்

வாழ்க வளமுடன், வளர்க உன் புகழ்!

Sunday, August 6, 2017

நண்பர்கள் தினம்

காற்றுவங்க கடற்கரை சென்றேன் கைகட்டு  வேண்டும்மா என்றார்கள்
ஏன் என்று கேட்டேன். நண்பர்கள் தினம் என்றார்கள்
புன்னகைத்து பக்கத்திலிருக்கும் பூங்காவிற்கு சென்றேன்
பூங்கொத்து வேண்டும்மா என்றார்கள்
ஏன் என்று கேட்டேன். நண்பர்கள் தினம் என்றார்கள்
வழிமறித்து வாழ்த்து அட்டை வேண்டுமா என்றார்கள்
ஏன் என்று கேட்டேன். நண்பர்கள் தினம் என்றார்கள்
இவற்றை தர எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை என்றேன்
மணிக்கு ஆயிரம், நண்பர்கள் வேண்டுமா என்றார்கள்!

©Balaji Palanidurai

Friday, August 4, 2017

ஆயிரம் இருந்தென்ன பயன்

நண்பர்கள் ஆயிரம் இருந்தென்ன  பயன்
தேவை படும்பொழுது கூப்பிட்டு பேச இல்லையெனில்
செய்திகள் ஆயிரம் இருந்தென்ன பயன்
படித்து மகிழ நேரம் இல்லையெனில்
உணர்ச்சிகள் ஆயிரம் இருந்தென்ன பயன்
பகிர்ந்துணர ஒரு வாழ்க்கைத்துணை இல்லையெனில்
மாற்றங்கள் ஆயிரம் இருந்தென்ன பயன்
நிம்மதியுள்ள வாழ்க்கை இல்லையெனில்.
......பின்வரும் வரிகள் எனது நண்பர் எழுதியது....
வார்த்தைகள் ஆயிரம் இருந்தென்ன பயன்
மயக்கும் கவிதை இல்லையெனில்
கவிதைகள் ஆயிரம் இருந்தென்ன பயன்
பாராட்ட ஒருவர் இல்லையெனில்
பாராட்ட ஆயிரம் பேர் இருந்தென்ன பயன்
மனம் ஒக்க வாழ்க்கைத்துணை
இல்லையெனில்
இவையெல்லாம் ஆயிரம் இருந்தென்ன பயன்
இறைவனடி மனம் புகவில்லையெனில்!


©Balaji Palanidurai

Sunday, July 30, 2017

கவிதை

எத்தனை கவிஞர்கள் நமக்குள்
எத்தனை நினைவுகள் மனத்திற்குள்
எத்தனை நண்பர்கள் இந்த உலகில்
எத்தனை தூரம் நம் நடுவில்

குறைந்தது தூரம், பெருகியது நட்பு
கலைந்தது கூச்சம், நிறைந்தது உணர்வு
விலகியது தயக்கம், கூடியது உற்சாகம்
அடங்கியது உற்சாகம், தலைதூக்கியது கவிதை....
... தன்னடக்க கவிதை, தாகம் தீர்க்கும் கவிதை, தானாக வந்த கவிதை !!!


©Balaji Palanidurai

முகவரி

முகவரியின் முகம் அதன் முதல் வரி பலருக்கு அகமே  அவர்களது முகவரி சிலருக்கு முகமே  அவர்களது முகவரி வாழ்வின் வெற்றிக்கு  அதுவே அறிகுறி அகம், பொர...