Wednesday, January 6, 2021

நரையும் மனநிறைவும்


நேற்று, என் நரையை கண்டு 
மனம் வாடிய சொந்தங்களுக்காக இன்று கறை அடித்தேன். 

கறை களைகட்டியது, முகம் மலர்ந்தது. ஆனால் என் மாற்றத்தை கண்ணாடி கண்டுகொள்ளவில்லை, புகைப்படமும் பாராட்டவில்லை. 
மனமில்லா கருவிகள்.

கறை, நரையை மறைக்கலாம், நிஜத்தை மறைக்குமா?

நிஜத்தை தாங்கும் தன்நம்பிக்கை இருந்ததால், தலைநரையே மன நிறைவின் முண்ணுதிரி என்று ஏற்றுக்கொண்டேன். 

கண் மீண்டும் கண்ணாடியை கண்டது. அகத்தின் அழகு முகத்தில் பிரதிபலித்தது.
மனம் மலர்ந்தது.

நெகிழ்ந்தேன். மகிந்தேன். பகிர்ந்தேன்.

- கீட்ஸ் பாலதாசன்

2 comments:

  1. கண்ணாடிக்கு மனம் இருப்பதால் தலை முடியை கருப்பாகவும் தாடியை நரையாகவும் காட்டி உண்மை சொல்கிறது கண்ணாடி.

    ReplyDelete

Paranteen beats

Let me into your teen, it makes sense drummed the beat in a mother's heart Let me be free and wean thru adolescence echoed the bea...