Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Wednesday, January 6, 2021

நரையும் மனநிறைவும்


நேற்று, என் நரையை கண்டு 
மனம் வாடிய சொந்தங்களுக்காக இன்று கறை அடித்தேன். 

கறை களைகட்டியது, முகம் மலர்ந்தது. ஆனால் என் மாற்றத்தை கண்ணாடி கண்டுகொள்ளவில்லை, புகைப்படமும் பாராட்டவில்லை. 
மனமில்லா கருவிகள்.

கறை, நரையை மறைக்கலாம், நிஜத்தை மறைக்குமா?

நிஜத்தை தாங்கும் தன்நம்பிக்கை இருந்ததால், தலைநரையே மன நிறைவின் முண்ணுதிரி என்று ஏற்றுக்கொண்டேன். 

கண் மீண்டும் கண்ணாடியை கண்டது. அகத்தின் அழகு முகத்தில் பிரதிபலித்தது.
மனம் மலர்ந்தது.

நெகிழ்ந்தேன். மகிந்தேன். பகிர்ந்தேன்.

- கீட்ஸ் பாலதாசன்

Thursday, January 23, 2020

சிந்தனையில் நம்பிக்கை

வாயால் வாழ்த்தலாம் என்று நண்பனை தொலைபேசியில் அழைத்தேன்.
மணி ஒலித்தது, நண்பனின் குரல் ஒலிக்கவில்லை. கோவில் மணி அடித்தும் கடவுளின் குரல் கேட்காதது போல் ஒரு உணர்வு. 

வார்த்தைகளாக வாட்ஸாப்பில் தூது  அனுப்பினேன்! சில நொடிகளில் பதில் கிடைத்தது. கோவிலில் அர்சனைக்கு பின் அஈச்சகரிடம் ஆசி கிடைத்தது போல் ஒரு உணர்வு. 

பதில் அனுப்பியது என் நண்பனா? அல்லது மனிதனை போன்று இயங்கும் தொலைபேசியில் உள்ள இயந்திரமா? ஆசீர்வதித்தது கடவுளா? அல்லது கடவுளை வழிப்படும் அஈச்சகரா?

ஆசி வேறு, பக்தி வேறு. வேறுபடுவது சிந்தனை. பொதுவானது நம்பிக்கை. சிந்தனை சீர்திருத்தம் தரும். நம்பிக்கை நல்வாழ்வு தரும்.

நம்பிக்கையுடன் சிந்திப்போம். சிந்தனையில் நம்பிக்கை வைப்போம்.

Sunday, August 6, 2017

நண்பர்கள் தினம்

காற்றுவங்க கடற்கரை சென்றேன் கைகட்டு  வேண்டும்மா என்றார்கள்
ஏன் என்று கேட்டேன். நண்பர்கள் தினம் என்றார்கள்
புன்னகைத்து பக்கத்திலிருக்கும் பூங்காவிற்கு சென்றேன்
பூங்கொத்து வேண்டும்மா என்றார்கள்
ஏன் என்று கேட்டேன். நண்பர்கள் தினம் என்றார்கள்
வழிமறித்து வாழ்த்து அட்டை வேண்டுமா என்றார்கள்
ஏன் என்று கேட்டேன். நண்பர்கள் தினம் என்றார்கள்
இவற்றை தர எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை என்றேன்
மணிக்கு ஆயிரம், நண்பர்கள் வேண்டுமா என்றார்கள்!

©Balaji Palanidurai

முகவரி

முகவரியின் முகம் அதன் முதல் வரி பலருக்கு அகமே  அவர்களது முகவரி சிலருக்கு முகமே  அவர்களது முகவரி வாழ்வின் வெற்றிக்கு  அதுவே அறிகுறி அகம், பொர...