வாயால் வாழ்த்தலாம் என்று நண்பனை தொலைபேசியில் அழைத்தேன்.
மணி ஒலித்தது, நண்பனின் குரல் ஒலிக்கவில்லை. கோவில் மணி அடித்தும் கடவுளின் குரல் கேட்காதது போல் ஒரு உணர்வு.
வார்த்தைகளாக வாட்ஸாப்பில் தூது அனுப்பினேன்! சில நொடிகளில் பதில் கிடைத்தது. கோவிலில் அர்சனைக்கு பின் அஈச்சகரிடம் ஆசி கிடைத்தது போல் ஒரு உணர்வு.
பதில் அனுப்பியது என் நண்பனா? அல்லது மனிதனை போன்று இயங்கும் தொலைபேசியில் உள்ள இயந்திரமா? ஆசீர்வதித்தது கடவுளா? அல்லது கடவுளை வழிப்படும் அஈச்சகரா?
நட்பு வேறு, பக்தி வேறு. வேறுபடுவது சிந்தனை. பொதுவானது நம்பிக்கை. சிந்தனை சீர்திருத்தம் தரும். நம்பிக்கை நல்வாழ்வு தரும்.
நம்பிக்கையுடன் சிந்திப்போம். சிந்தனையில் நம்பிக்கை வைப்போம்.
No comments:
Post a Comment