Sunday, August 6, 2017

நண்பர்கள் தினம்

காற்றுவங்க கடற்கரை சென்றேன் கைகட்டு  வேண்டும்மா என்றார்கள்
ஏன் என்று கேட்டேன். நண்பர்கள் தினம் என்றார்கள்
புன்னகைத்து பக்கத்திலிருக்கும் பூங்காவிற்கு சென்றேன்
பூங்கொத்து வேண்டும்மா என்றார்கள்
ஏன் என்று கேட்டேன். நண்பர்கள் தினம் என்றார்கள்
வழிமறித்து வாழ்த்து அட்டை வேண்டுமா என்றார்கள்
ஏன் என்று கேட்டேன். நண்பர்கள் தினம் என்றார்கள்
இவற்றை தர எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை என்றேன்
மணிக்கு ஆயிரம், நண்பர்கள் வேண்டுமா என்றார்கள்!

©Balaji Palanidurai

No comments:

Post a Comment

நடைபாதை, நம் உரிமை

நடைபாதை கடை மேடை அல்ல வணிகம் செய்து வரி வசூலிக்க  அவை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதை  மக்களின் வரிப்பணத்தால் கட்டிய பாதை  ஒரு நாட...