Friday, October 13, 2017

இழப்பின் உள் குரல்

மாலை நேர மயக்கமா அல்லது
மனதில் தோன்றிய வருத்தமா?
தன் தந்தை இறுதி படுக்கையில்
மெலிந்து உறங்கும் தோற்றமா?
தன் நெஞ்சில் என்னை தூக்கி வளர்த்த அவரை
என் தோள்கள் சுமக்கும் காலம் தள்ளித்தான் போகுமா?
கூடியிருக்கும் சொந்தங்களுக்கு 
என் உள் குரல் தான் கேட்குமா?
கேட்டாலும், போகும் உயிரை 
அவர்களால் தடுக்க முடியுமா?
குடும்பத்தலைவன் பொறுப்பை ஏற்கும் 
தருணம் வந்துவிட்ட அச்சமா?
அப்பொறுப்பில் கால்பங்கு எனக்கு
மரபுவழி தான் வந்து சேருமா?
கொள்ளிவைத்த கைகளுக்கு கடைசி 
வரம் ஒன்று கிடைக்குமா?
என் தந்தை உறங்க இடம் ஒன்று 
சொர்க்கத்தில் கிடைக்குமா?

©Balaji Palanidurai

No comments:

Post a Comment

Paranteen beats

Let me into your teen, it makes sense drummed the beat in a mother's heart Let me be free and wean thru adolescence echoed the bea...