Sunday, March 31, 2019

என்று தணியும் இந்த இறைச்சியின் மோகம்


Image result for mutton biryani








அடுப்பில் வேகுது இளம் ஆடு
அது துள்ளி குதித்த இடம் கருவக்காடு
காட்டை அழித்தோம் நிலத்துக்காக
ஆட்டை அழித்தோம் இறைச்சிக்காக

அழித்த காட்டில் நட பயின்றோம்
ஆடு மாடுகளை நடவ பயின்றோம்
செழித்தது காடு மட்டும் அல்ல
நமது சுகாதாரமும் தான்

வயகாட்டில் படர்ந்த நெற்கதிர்கள்
மனித மேம்பட்டுக்கான எதிரொலிகள்
வயகாட்டை அழித்தோம் வீட்டு மனைக்காக
கால்நடைகளை அழித்தோம் வாய் ருசிக்காக

அழிந்தது வயகாடு மட்டும் அல்ல, 
கலாச்சாரமும் தான்
வேந்தது ஆட்டுக் குடல் மட்டும் அல்ல,
நமது கல்லிரலும் தான்

பிறகு ஏன் நம்முள் இந்த இறைச்சியின் மோகம்
என்று தணியும் இந்த ருசியின் தாகம்
தனிந்தால் மேம்படுவது உலக சுகாதாரம் மட்டுமல்ல
நமது இரக்க உணர்வும் தான்

No comments:

Post a Comment

முகவரி

முகவரியின் முகம் அதன் முதல் வரி பலருக்கு அகமே  அவர்களது முகவரி சிலருக்கு முகமே  அவர்களது முகவரி வாழ்வின் வெற்றிக்கு  அதுவே அறிகுறி அகம், பொர...