Sunday, May 17, 2026

கனா கண்டேன்

“நான் ஒரு கனா கண்டேன்!”
என்று நாம் சொல்லும் போழுது, உண்மையில் நாம் சொல்வது
ஒரு "மனகாட்சி" பற்றியே.

அந்த காட்சி…
இன்னும் வராத எதிர்காலத்தின் உள்ளுணர்வு.
ஆழ்ந்த உறக்கத்தின் இருளில்
வண்ணங்களும் உணர்வுகளும் கொண்டு உயிருடன் தோன்றும் ஒரு எதிர்காலக் காட்சி. 

செவிப்பறையின் உணர்வுகள் முடங்கி இருப்பினும்
இதயம் ஓசைகளை கேட்கும் அளவிற்கு 
உண்மையும் உயிர்ப்பும் கொண்ட ஒரு  இனிய காட்சி.

அருகில் இருப்பவர்களைப் போல உணர்த்தும் மனிதர்கள்...
ஆனால் இன்னும் வாழ்க்கையில் சந்திக்காத முகங்கள்.

தொட்டுப் பார்க்க முடியாத காட்சி, 
ஆனால் மனசாட்சியை தொட்டுவிடும் உணர்வுகள்.

கண்முன் பரிமாறப்பட்டிருக்கும் பண்டங்களின் சுவைக்காமலே 
நாக்கில் நீர் சுரக்க அசை போட வைக்கும்
ஒரு சுவையான காட்சி.

காற்றில் மனம் இல்லாத போதும்
மனது வாசனையை உணரும் 
ஒரு பசுமையான காட்சி.

அதனால் தான்…
“நான் ஒரு கனா கண்டேன்” 
என்று நாம் சொல்வது 
— தன் வாழ்வின் எதிர்பார்ப்புகளை
நிகழ்கால அனுபவத்தால் வர்ணிக்கும் மனக்குரலே ஆகும்.

— கீட்ஸ் பாலதாசன்
17th May 2026
7:47 am
பெருங்குடி, சென்னை.

No comments:

Post a Comment

Faith in Thought

I called my friend on the phone to wish him with my own voice. The bell rang, but my friend's voice did not. It felt like a temple bell ...